எங்களைப் பற்றி – பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்கம் (PTS)
பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்கம் (PTS) என்பது IRS பிரிவு 501(c)(3)-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட, அரசியல் சார்பற்றதும், மத சார்பற்றதுமான ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
இந்த சங்கம் 2012 ஆம் ஆண்டிலிருந்து பிட்ஸ்பர்க் பகுதியில் தமிழ்ச் சமூகத்துக்கு சேவையாற்றி வருகிறது.
பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்கம், ஒரே சிந்தனையுடையவர்களை ஒன்றிணைத்து, சமூக தொடர்புகளை மேம்படுத்தவும், எமது பாரம்பரிய பண்பாட்டை காக்கவும், அதனை அடுத்த தலைமுறைக்கு பரப்பவும் உருவாக்கப்பட்டது.
சங்கத்தின் நிர்வாகம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது:
- அறங்காவலர்கள் குழு
- அலுவலர்கள் குழு
அறங்காவலர்கள் குழு: கொள்கை வடிவமைப்பு மற்றும் அலுவலர்கள் குழுவின் பணிகளை மேற்பார்வை செய்வதில் ஈடுபடுகின்றனர்.
அலுவலர்கள் குழு: சங்கத்தின் நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதில் பொறுப்பு வகிக்கின்றனர்.
அலுவலர்கள் குழு மூன்று ஆண்டுகள் காலத்திற்கு பதவியில் இருந்து, அதன் பின்னர் புதிய குழு தேர்தல் மூலம் பொறுப்பேற்கும்.
சங்கம் தன்னைச் சூழ்ந்த சூழலின் மாற்றங்களுக்கும், தமிழ்ச்சமூகத்தின் தேவைகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு, கடந்த 7 ஆண்டுகளாக சிறப்பான வளர்ச்சியுடன் முன்னேறி வருகிறது.
பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்கம் தற்போது, அமெரிக்கத் தமிழ்ச் சங்க அகாடமி (ATA) பாடத்திட்டத்தை பின்பற்றி, மூன்று இடங்களில் குழந்தைகளுக்கான தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது.
சங்கம் பல்வேறு வழிகளில் தமிழ் மொழியும் பண்பாட்டும் தொடர்ச்சியாக வளர வளர பங்களித்து வருகிறது:
- சமூக மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்
- முக்கியத் தமிழ் திருவிழாக்களை கொண்டாடுதல்
- குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்றுத்தருதல்
- நற்பணி மற்றும் சமூக நலத்திட்டங்களில் பங்கேற்பது மற்றும் ஆதரிப்பது
உறுப்பினர் சேர்க்கை:
பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்க உறுப்பினர் சேர்க்கை, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டில் ஆர்வமுள்ள அனைவருக்கும் திறந்துள்ளது.
உங்களின் உறுப்பினர் பங்களிப்பு, சமூக நலனுக்காகவும், பொதுநலத்திற்காகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கு வலுசேர்க்கும்.
பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்கத்தின் (PTS) பிரதான நோக்கம்:
- இப்பகுதியில் உள்ள தமிழர்களுக்கான ஓருங்கிணைந்த மேடையை உருவாக்கி, ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், இணைந்து செயல்படவும் வாய்ப்பு வழங்குதல்.
- தமிழ் திருவிழாக்களை கொண்டாடுதல் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல்.
- இப்பகுதியில் உள்ள தமிழ் சமூகத்திற்கு ஆதரவளித்தல்
- தமிழ் பண்பாட்டை வளர்த்தல் மற்றும் காப்பாற்றுதல் – உலகில் தனித்துவம் வாய்ந்த எங்கள் பண்பாட்டை பராமரித்தல்.
- தமிழ் இளைஞர்களுக்கு எங்கள் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்துதல் – அவர்கள் தமிழ் மொழி, பண்பாடு, மரபுகளை கற்றுக்கொண்டு, மதித்து, கடைப்பிடிக்க உற்சாகப்படுத்துதல்.
எங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 2025 - 2026
சிறப்பு உறுப்பினர்கள்
பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்கம் (PTS) தனது செயல்பாடுகளைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் அலுவலர்கள் குழுவும், கொள்கை வடிவமைப்பு மற்றும் மேற்பார்வைக்கு பொறுப்பான அறங்காவலர்கள் குழுவும் கொண்டுள்ளது.
தீபிகா ஸ்ரீதரன்
தலைவர்
வெங்கடேஷ் குருசாமி
செயலாளர்
ராகவன் கண்ணன்
பொருளாளர்
மாதங்கி வெங்கடரங்கன்
உறுப்பினர் ஒருங்கிணைப்பாளர்
ஸ்ரீகாந்த் சேஷாத்ரி
நிகழ்வுகள் ஒருங்கிணைப்பாளர்
இராமலிங்கம் முருகன்
கல்வி ஒருங்கிணைப்பாளர்
பிரசன்னா செல்வராஜ்
இணையம் & வெளியீடுகள்
லக்ஷ்மி நரசிம்ஹன்
உணவு ஒருங்கிணைப்பாளர்
விஜி ரகு
தணிக்கை ஒருங்கிணைப்பாளர்
எங்கள்
இளைஞர் அணி
support team
வினய் பிரதாப்
இளைஞர் அணி
ஹரிஷ் ராஜகணபதி
இளைஞர் அணி
ஓவியா சாமிநாதன்
இளைஞர் அணி